முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலுடன் 20 சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தலை நடத்த தயார் - தமிழக தேர்தல் அதிகாரி தகவல்

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த தயாராக உள்ளோம் என்று தமிழக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

32 வாகனங்கள்...

பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள ஒப்புகை சீட்டுடன் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தை செயல்படுத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குசாவடிகளிலும், மின்னணு எந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டு முறையை செயல்படுத்த பொதுமக்களுக்கு செயல் விளக்கம்  தொடங்கியது. சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர செயல் விளக்கம் அளிக்க 32 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் செல்லும். அங்கு பொது மக்கள் ஓட்டுப்பதிவு செய்து யாருக்கு வாக்களிக்கிறோம் என்கிற தகவலை உறுதி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னையில் அண்ணாநகர் மத்திய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்புகைச்சீட்டு செயல் விளக்க திட்டத்தினை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

அறிவிக்கப்படவில்லை...

பாராளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது. ஓசூர் சட்டசபை தொகுதி இன்னும் காலியானதாக அறிவிக்கப்படவில்லை. காலியானதாக அறிவித்தால் அதற்கான ஆயத்த பணிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்.மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு செயல்விளக்கம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் நடத்தப்படும். 10 நாட்களுக்குள் இதனை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். தேவைப்பட்டால் கூடுதலாக நாட்கள் ஒதுக்கப்படும்.

7 வினாடிகள்...

இந்த ஒப்புகை சீட்டு முறையின் மூலம் கள்ள ஓட்டினை தடுக்க முடியும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வதோடு, ஓட்டு எண்ணிக்கையின் போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் இந்த பெட்டியினை திறந்து அதில் உள்ள சீட்டினை எண்ண முடியும். வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு தருவதில்லை. 7 வினாடிகள் மட்டுமே பார்க்க முடியும். ஒருவாகனம் தினமும் 5 வாக்குச்சாவடிகளுக்கு சென்று செயல் விளக்கம் அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து