வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடமாட்டேன்: கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் மறுப்பு

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      விளையாட்டு
shewag 2019 02 09

புதுடெல்லி : பா.ஜனதா சார்பில் போட்டியிட போவதாக வெளியான செய்திக்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க முயற்சி...

பாராளுமன்ற தேர்தலில் பிரபலங்களை இழுக்க அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களை இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லால் பா.ஜனதா சார்பில் கேரளாவில் போட்டியிடப் போவதாக கூறப்பட்டது. இதை அவர் மறுத்துள்ளார்.

எண்ணம் இல்லை...

இந்த நிலையில் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் ஷேவாக் பா.ஜனதா சார்பில் அரியானா மாநிலம் ரோத்தக் தொகுதியில் போட்டியிட போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதை ஷேவாக் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 2014-ம் ஆண்டு வந்த வதந்திதான். இப்போது வருகிறது. இதில் புதுமை எதுவுமில்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எதுவும் இல்லை. இவ்வாறு ஷேவாக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து