உலக கோப்பையில் டோனி முக்கிய பங்கு வகிப்பார் - யுவராஜ் சிங் கணிப்பு

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      விளையாட்டு
dhoni-yuvaraj singh 2019 02 09

மும்பை : உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் டோனியின் பங்களிப்பு முக்கிய இடமாக இருக்கும் என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

வழிகாட்டி...

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் டோனி இடம் பெறுவது குறித்து யுவராஜ்சிங் கருத்து தெரிவித்துள்ளார். டோனிக்கு சிறந்த கிரிக்கெட் அறிவு இருக்கிறது. விக்கெட் கீப்பராக இருப்பதால் ஆட்டத்தின் போக்கை நன்கு கணிக்கக்கூடியவர். அந்த பணியை அவர் பல வருடங்களாக தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார். அவர் ஒரு சிறந்த கேப்டனாகவும் இருந்து இருக்கிறார். இளம்வீரர்களை மட்டுமல்லாமல் கேப்டன் விராட்கோலியையும் அனைத்து தருணங்களிலும் வழிகாட்டி வருகிறார். இதனால் முடிவு எடுக்கும் பணிகளுக்காகவே டோனி உலக கோப்பை அணியில் முக்கிய இடம் பெற வேண்டும்.

பதில் அளிக்க...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அவருக்கு சிறப்பானதாக அமைந்திருக்கிறது. வழக்கமான அவரது ஷாட்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் டோனியின் பங்களிப்பு முக்கிய இடமாக இருக்கும். அவர் எந்த இடத்தில் களம் இறங்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அவர் தான் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து