முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.வி.சிந்துவை ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்த சீன நிறுவனம்

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் : இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் லி நிங் விளையாட்டு நிறுவனத்துடன் ரூ.50 கோடியில் விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

விளம்பர ஒப்பந்தம்

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரை சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான லி நிங், ரூ.50 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளது. நான்கு வருடத்திற்கான இந்த விளம்பர ஒப்பந்தத்தில் சிந்து கையெழுத்திட்டுள்ளார்.

மிகப்பெரிய...

உலக பேட்மிண்டனில் கையெழுத்திடப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தங்களில் சிந்துவின் ஒப்பந்தமும் ஒன்று. இந்த ரூ.50 கோடியில், ரூ.40 கோடி ஸ்பான்சர்ஷிப்பிற்கும், ரூ. 10 கோடி விளையாட்டு உபகரணங்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளது  என அந்நிறுவனத்தின் பிரத்தியேக பங்குதாரர் மகேந்தர் கபூர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தத்திற்கான தொகையானது, பூமா நிறுவனம் கிரிக்கெட் வீரர் விராத் கோலிக்கு வழங்கப்பட்டதற்கு இணையானதாகும் எனவும் தெரிவித்தார்.

அதிக தொகைக்கு...

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பிவி சிந்து ஆவார். மேலும் உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனைகள் தொடர்பாக போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், பிவி சிந்து 7வது இடம் பிடித்தார். லி நிங் நிறுவனம் ஏற்கனவே 2014-15 ஆண்டில் ரூ.1.25 கோடிக்கு பி.வி.சிந்துவை ஒப்பந்தம் செய்திருந்தது. பின்னர் 2016ம் ஆண்டு யோனெக்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.3.5 கோடி என்ற வீதத்தில், மூன்று ஆண்டிற்கு ஒப்பந்தம் செய்தது. தற்போது இரண்டாவது முறையாக அதிக தொகைக்கு பிவி சிந்துவை லி நிங் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

கிதாம்பி ஸ்ரீகாந்த்...

இதேபோல் கடந்த மாதம் கிதாம்பி ஸ்ரீகாந்த் ரூ.35 கோடியில் 4 ஆண்டுகளுக்கு இந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.  ஏற்கனவே சீனாவின் லி நிங் நிறுவனம் கடந்த ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் 2 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2020ம் ஆண்டு  டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான உடைகள் மற்றும் காலணி ஆகியவற்றை இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்நிறுவனம் வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து