நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் நிலவுக்குச் சென்றவர் நாசா பாடலை வெளியிட்ட பாப் பாடகிக்கு பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019      உலகம்
pop singer praise 2019 02 10

வாஷிங்டன் : சமீபத்தில் நாசா என்ற பாடலை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த பாப் பாடகிக்கு நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் நிலவுக்குச் சென்ற புஸ் ஆல்ட்ரின் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதை என்னால் நம்ப முடியவில்லை என்று பாடகி தெரிவித்துள்ளார்.

பாப் நட்சத்திரமான அரியனா கிராண்டின் புதிய நாசா பாடல்தான் அமெரிக்க விண்வெளி நிறுவனத்திற்கும் பாடகிக்கும் இடையில் டுவீட் பரிமாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இப்பாடல் விண்வெளி ஆய்வு மற்றும் பிரபஞ்சத்தைப் பற்றிய குறிப்புகளுடன் இந்தப் பாடல் நாசா என்ற அதன் பெயரைக் கொண்டுள்ளதாக ஸ்பேஸ்.காம் வலைப்பக்கமும் தெரிவித்துள்ளது.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவெனில் நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் காலடி வைத்த புஸ் ஆல்ட்டிரினும் டுவீட் உரையாடலில் இணைந்து கொண்டார் என்பதுதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து