முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு கிரீன் கார்டு கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில், நிரந்தர குடியுரிமைக்கான, கிரீன் கார்டு பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும் வகையில், அந்த நாட்டு பார்லிமென்டில், மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டால், அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு நிம்மதி ஏற்படும்.

அமெரிக்க அரசு ஆண்டுதோறும் 1.4 லட்சம் கிரீன் கார்டுகள் வழங்கி வருகிறது. இதில் ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 7 சதவீத கிரீன் கார்டுகள் அளவில் மட்டுமே வழங்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கிரீன் கார்டு பெறுவதற்கு, 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பலர் குடும்பத்தைப் பிரிந்து, அமெரிக்காவில் வாழ வேண்டிய நிலை உள்ளது. வேறு சில நாட்டினர், குறைந்த அமெரிக்காவுக்கு வருகின்றனர். சதவீத அடிப்டையில், இவர்களுக்கு, கிரீன் கார்டு உடனடியாக கிடைக்கிறது. ஆனால், சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அதிகமாக, கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பதால், அவர்களுக்கு இடம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

இந்த நடைமுறைக்கு, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்களும் அதிருப்தி தெரிவித்தன.

இந்நிலையில், கிரீன் கார்டுகள் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும் வகையில், புதிய மசோதா, அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற ரீதியில் கிரீன் கார்டு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால், அமெரிக்காவில் பணிபுரியும் ஏராளமானோர் பயனடைவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து