மனைவியை கைவிட்டவர் குடும்ப அமைப்பை எப்படி மதிப்பார்? பிரதமர் மோடி மீது சந்திரபாபு நாயுடு பதிலடி

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019      இந்தியா
chandrababu naidu 2019 01 14

அமராவதி : திருமணம் செய்த மனைவியை கைவிட்ட பிரதமர் மோடிக்கு குடும்ப அமைப்பின் மீது எப்படி மதிப்பிருக்க முடியும்? என ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அவரது மகனின் பெயரை சுட்டிக்காட்டி ‘லோகேஷின் தந்தை’ என்று கிண்டலாக கூறினார்.

இதனால், ஆத்திரமடைந்த சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் மனைவி பெயரை குறிப்பிட்டு கடுமையாக தாக்கிப் பேசினார். நான் ஒரு குடும்பஸ்தன். எனது குடும்பத்தாரை நான் மிகவும் நேசிக்கிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால், பிரதமர் மோடிக்கு மனைவியும் இல்லை, குடும்பமும் இல்லை. ஆனால், இன்று அவர் என்னுடைய மகனை குறிப்பிட்டு பேசியதால் மோடியின் மனைவியைப்பற்றி நான் இப்போது பேச வேண்டியுள்ளது.

மக்களே!, நரேந்திர மோடிக்கு ஒரு மனைவி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த மனைவியின் பெயர் ஜசோதாபென். திருமணம் செய்த மனைவியை கைவிட்ட பிரதமர் மோடிக்கு குடும்ப அமைப்பின் மீது எப்படி மரியாதை இருக்க முடியும்? என சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து