20 ஓவர் கிரிக்கெட் போட்டி- நியூசிலாந்து அணி வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019      விளையாட்டு
t20 NZ win 2019 02 10

ஹாமில்டன் : நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோற்றது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகப்பட்சமாக மன்ரோ 72 ரன்களை எடுத்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்களை எடுத்தார். அகமத், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

பின்னர் 213 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெடுகளை இழந்து 208 ரன் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 4 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்திய தரப்பில் விஜய் சங்கர் 43 ரன், ரோகித் சர்மா 38 ரன், தினேஷ் கார்த்திக் 33 ரன் மற்றும் ரிஷாப் பான்ட் 28 ரன் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னெர் மற்றும் டேரில் மிட்செல் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து