முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயமான விமானியை தேடுவதற்கு 27000 பவுண்டு வழங்கிய கால்பந்து வீரர்

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

கார்டிப், விமான விபத்தில் உயிரிழந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சலாவின் உடல் மீட்கப்பட்ட நிலையில், விமானியைத் தேடும் பணிகளுக்காக கால்பந்து வீரர் ஒருவர் 27000 பவுண்டு அளித்துள்ளார்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா, ஜனவரி 21 மாலை ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். சானல் தீவுகளுக்கு அருகே திடீரென அவரது விமானம் மாயமானது. விமானத்தில் பயணம் செய்த எமிலியானோ மற்றும் பைலட் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து எமிலியானோ சலாவின் உடல் கடந்த 7 - ம் தேதி கடலுக்கடியில் கண்டறியப்பட்டது. ஆனால் விமானி டேவிட் இபோட்சன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் காணாமல் போன விமானியை தேடும் பணிகளுக்காக பிரெஞ்சு கால்பந்து வீரர் கைலன் மப்பே 27000 பவுண்டு (இந்திய ரூபாய் மதிப்பில் 24,87,547) நிதியுதவி வழங்கியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேரி லிங்கர் 1000 பவுண்டு வழங்கி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து