எந்த வாக்குறுதியையும் மோடி நிறைவேற்றவில்லை: ராகுல்

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2019      இந்தியா
rahul-gandhi 2019 01 11

புது டெல்லி, மோடி அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்று சந்திரபாபு நாயுடு நடத்தும்  உண்ணாவிரத போராட்டத்தில் பங்குபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு நேற்று உண்ணாவிரதமிருந்தார். முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆந்திர மாநில அரசு பணியாளர்கள் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அம்மாநிலத்தின் மாணவர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று ஆதரவு தெரிவித்து உள்ளார். பின்னர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராகுல்,

அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்ட பிரதமர்  மோடி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆந்திர மக்களின் கோரிக்கைகளுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன். அவர் ஆந்திரா மக்களுக்கு அளித்த உறுதிமொழியை அவர் நிறைவேற்றவில்லை. மோடி, எங்கு சென்றாலும் பொய் சொல்கிறார். அவரிடம் எந்தவித நம்பகத்தன்மையையும் பெறவில்லை என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து