டெல்லியில் சந்திரபாபு உண்ணாவிரதம்: இன்று ஜனாதிபதியை சந்திக்கிறார்

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2019      இந்தியா
chandrababunaidu 2018 11 17

புது டெல்லி, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, மாநில முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு டெல்லியில் உள்ள ஆந்திரா பவனில் நேற்று தர்ம போராட்ட தீக் ஷா எனும் பெயரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்து இருந்தது. ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் நேற்று காலை 8 மணிக்கு ஆந்திரா பவனில் தர்ம போரட்ட தீக் ஷா என்ற பெயரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டத்தில் மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள், பங்கேற்றுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டம் முடிந்தபின் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, சந்திரபாபு நாயுடு மனு அளிக்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து