பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 240 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2019      தமிழகம்
minister Sengottaiyan 2018 10 16

Source: provided

சென்னை : பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 240 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டசபையில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் கேள்வி ஒன்றை எழுப்பினார். சிறப்பு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க அரசு ஆவன செய்யுமா ? என்று கேட்டார். அதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்து கூறியதாவது:-

பணி நியமனம்...

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 2012-2013 மற்றும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 417 பேர் ஆவார்கள். அரசாணைப்படி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய 1 சதவிகித இடஒதுக்கீட்டுக்கான பணியிடங்கள் மொத்தம் 285 ஆகும். தேர்ச்சி பெற்ற பணி நாடுனர்களின் உரிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 240 பேர் ஆவா். அவ்வாறு தேர்ச்சி பெற்ற 240 பணிநாடுனர்கள் பாடம் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் பணி தேர்வு செய்யப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களுக்காக பணியாற்றி வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 4 சதவிகிதமாகும். அதில் 1 சதவீதம் பார்வையாற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள்.

7,500 பேர்...

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 90 ஆக அறிவிக்கப்பட்டு 82 மதிப்பெண் எடுத்தவர்களும் தேர்வு செய்யலாம் என ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 7,500 பேர் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றுகிறார்கள். உரிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் காலி பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து