நான் விலாங்கு மீன் அல்ல; வழிகாட்டும் 'டால்பின்': சட்டசபையில் அமைச்சர் ஜெயகுமார் ருசிகரம்

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2019      தமிழகம்
Jayakumar 24-11-2018

Source: provided

சென்னை : நான் வலையில் சிக்காத விலாங்குமீன் அல்ல: வழிகாட்டும் டால்பின் என்று சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர் இன்பதுரைக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்தார்.

டால்பின்...

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, அ.தி.மு.க. உறுப்பினர் இன்பதுரை பேசுகையில், தமிழகத்தில் மீன்பிடித் துறைமுகம் இல்லாத மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் தான், எனவே அங்கு மீன்பிடித்துறை அமைக்க வேண்டும். ஆனால் மீன்வளத்துறை அமைச்சர் விலாங்கு மீன் போல வலையில் சிக்காமல் நழுவிக்கொண்டே இருக்கிறார் என்று குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், உறுப்பினர் இன்பதுரை, என்னை விலாங்கு மீன் என்று கூறினார். நான் விலாங்கு மீன் அல்ல, அனைவருக்கும் வழிகாட்டும் டால்பின் என்றார்.

பரிசீலனை...

திருநெல்வேலி மாவட்டத்தில் மீன்பிடித்துறைமுகம் இல்லாமல் இருப்பது உண்மை தான். இந்த மாவட்டத்தில் உள்ள அருவிக்கரையில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க ஐ.டி.ஐ. கடல் சார் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் துணையோடு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சாத்தியக்கூறு இருக்குமானால் வரும் ஆண்டில் அங்கு மீன்பிடித்துறைமுகம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து