முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார ரீதியாக பாகிஸ்தானுக்கு உதவ தயார் : சர்வதேச நிதியம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வதேச நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் அந்நாடு உள்ளது.

இது ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அன்னியச்செலாவணி கையிருப்பை விட குறைவான தொகை ஆகும். அது மட்டுமின்றி இந்த தொகை, 7 வார கால இறக்குமதிக்குத்தான் பாகிஸ்தானுக்கு போதுமானதாக உள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு கடன் வழங்க உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் மறுத்து விட்டன. இந்த நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு சீனா 2.5 பில்லியன் டாலரும் (சுமார் ரூ.17ஆயிரத்து 750 கோடி) சவுதி அரேபியா 6 பில்லியன் டாலரும் (சுமார் ரூ.42 ஆயிரத்து 600 கோடி) நிதி உதவியாக வழங்க முன்வந்தன.

இது குறித்து ஐ.எம்.எப். நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானை பொருளாதார பின்னடைவில் இருந்து மீட்க அந்நாட்டிற்கு உதவ ஐ.எம்.எப். தயாராக உள்ளது. இதற்காக தீர்க்கமான மற்றும் வலுவான கொள்கைகளை வகுத்து கூடுதல் வளர்ச்சிக்கான அடித்தளங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து