முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் இந்தியரை கொன்ற பாகிஸ்தானியருக்கு 7 ஆண்டு சிறை

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

துபாய் : துபாயில் உடன் தங்கியிருந்த இந்தியரை கொன்ற வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துபாயில் ஜெபேல் அலி ஹோட்டலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1- ம் தேதி, அறையில் உள்ள மின்விளக்குகளை அணைக்காமல் வெளியேறிய காரணத்தினால் இந்தியருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் அந்த பாகிஸ்தானியை உடைமைகளுடன் வெளியேறுமாறு இந்தியர் கூறியுள்ளார். இதனால் பாகிஸ்தானியர் அந்த அறையில் இருந்து வெளியேறினார். சிறிது நேரம் கழித்து அறைக்கு திரும்பி வந்த பாகிஸ்தான் நபர் ஆத்திரமடைந்து தனது பையில் இருந்து கத்தியை எடுத்து இந்தியரைக் குத்தியுள்ளார். இதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ரூமில் தங்கியிருந்த மற்ற நபர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொலை செய்யப்பட்ட இந்தியரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் நபர், அறைக்கு வந்து தூங்கிக்கொண்டிருந்த மற்றவர்களுக்கும் தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக ஹோட்டலின் மேற்பார்வையாளர் கூறினார்.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த துபாய் கோர்ட்டு, குற்றவாளிக்கு 7 - ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. குற்றவாளி 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து