முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாவட்டத்திலேயே முதல் முறையாக ஒட்டன்சத்திரத்தில் பருத்தி ஏலம்

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வேளான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலேயே முதல் முறையாக ஒட்டன்சத்திரத்தில் பருத்தி ஏலம் திண்டுக்கல் மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
 ஏலத்திற்கு கள்ளிமந்தையம், உசிலம்பட்டி, ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை, கோவை, அன்னூர், தாராபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து 69 விவசாயிகள் 12 வியாபாரிகள் கலந்துகொண்டனர். இதில் 43 டன் பருத்தி விற்பனைக்காக வந்தது. ரூ.6004, ரூ.5417, ரூ.4800 ஆகிய விலைகளில் ஏலம் போனது. பழனி, வத்தலகுண்டு, திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை, நத்தம் கோபால்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட 8 இடங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் ஒட்டன்சத்திரத்தில் மாவட்டத்திலேயே முதன் முறையாக பருத்தி ஏலம் நடைபெற்றது. வாரந்தோறும் செவ்வாய் அன்று பருத்திக்கான ஏலம் நடைபெறும் என்றும், மேலும் பருத்தி ஏலம் சம்மந்தமாக தகவல்களுக்கு ஒட்டன்சத்திரம் கண்காணிப்பாளர் ஜோசப்அருளானந்தம் அவர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் சந்திரசேகர் தெரிவித்தார். 
 இதில் விற்பனைக்குழு கண்காணிப்பாளர்கள் ராமன், ராதாகிருஷ்ணன், அருண் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து