முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக ஹஜ் பயணிகளின் புனித பயணத்திற்காக 1500 கூடுதல் இருக்கைகளை ஒதுக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக ஹஜ் பயணிகளின் புனித பயணத்திற்காக மேலும் 1500 கூடுதல் இருக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறி்தது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

3,534 இருக்கைகள்...

2018-ம் ஆண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஹஜ் பயணத்திற்கு 3,542 இருக்கைகள் மத்திய அரசு அனுமதித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதன் அடிப்படையில் அந்த இருக்கைகளின் எண்ணிக்கையை 3,816 ஆக உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். 2019-ம் ஆண்டு மத்திய அரசு 3,534 இருக்கைகளை ஹஜ் பயணிகளுக்காக ஒதுக்கியிருக்கிறது.

கூடுதல் இருக்கைகள்...

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி ஏற்கனவே 6,379 பேர் தங்களது ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். எனவே அதிகளவிலான எண்ணிக்கையில் விண்ணப்பித்திருப்பதால் கூடுதலாக 1,500 இருக்கைகளை வழங்க வேண்டுமென சிறுபான்மை அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் தமிழக ஹஜ் புனித யாத்திரிகர்கள் பயன்பெறுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து