முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபரின் பிரசார பேரணியில் விபரீதம்: நைஜீரியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பலி - பலர் காயம்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

அபுஜா : நைஜீரியா அதிபர் முகமது புஹாரி தலைமையில் நடந்த பிரசார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத்தேர்தல்

நைஜீரியா அதிபராக பதவி வகித்து வரும் முகமது புஹாரியின் 4 ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, நைஜீரியாவுக்கு வருகிற சனிக்கிழமை பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் புஹாரி மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக முக்கிய போட்டியாளராக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், நைஜீரியா முன்னாள் துணை அதிபர் அட்டிக்கு அபுபக்கர் களமிறங்குகிறார்.

பிரசார பேரணி

இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு அதிபர் முகமது புஹாரி தலைமையில் பிரசார பேரணி நடத்தப்பட்டது. போர்ட் ஹார்கோர்ட் நகரின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் அதோக்கியே அமியெசிமகா மைதானத்தில் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் முன்னிலையில் புஹாரி பேசினார். அவரது பேச்சைத் தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக பாதி திறக்கப்பட்ட சிறிய கேட் வழியாக பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு வெளியேறிதால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் செய்து நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

படுகாயமடைந்த பலரும் அருகாமையிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து