முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் குற்றச்சாட்டு: மெக்சிகோவில் 152 பாதிரியார் நீக்கம்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

மெக்சிகோ : மெக்சிகோவில் கடந்த 9 ஆண்டுகளில் சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 152 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்று மெக்சிகோ. கடந்த ஆண்டு 2018 ல் கேரள கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இதையடுத்து உலக அளவில் சர்ச்களில் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் பாதிரியார்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் மெக்சிகோவில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 152 பாதிரியார்கள் சர்ச் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மோன்டரேயின் பேராயர் ரோஜிலியோ கப்ரேரா கூறியது:கடந்த 9 ஆண்டுகளாக கத்தோலிக்க பாதிரியார்கள் 152 பேர் சிறுவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக சர்ச்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிறை தண்டனை பெற்றுள்ளனர், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து