முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

30 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் எனது தலைமையில் தான் ஸ்திரமான ஆட்சி அமைந்துள்ளது - பார்லி.யில் பிரதமர் மோடி பேச்சு

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : 30 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் எனது தலைமையில் தான் ஸ்திரமான ஆட்சி அமைந்துள்ளது என்றும் பா.ஜ.க. அரசாங்கம் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் 100 சதவிகிதத்திற்கும் மேல் உழைத்துள்ளது என்றும் பாராளுமன்றத்தில் நேற்று பிரதமர் மோடி பேசினார்.

மகிழ்ச்சி அளிக்கிறது...

பாராளுமன்ற கூட்டத்தின் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

டிஜிட்டல் பாதையில் இந்தியா பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் செயற்கைக்கோள்கள் அதிகளவில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. வங்கதேசம் - இந்தியா இடையேயான நில பிரச்சினையை தீர்த்துள்ளோம். பெண் எம்.பி-க்களுக்கு எனது வரவேற்பையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பெண்கள் என்பது பெருமை. உலக பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

அண்டை நாடுகளுக்கு...

இதுவரை இல்லாத அளவுக்கு மகளிர் அதிகம் பேர் இடம் பெற்றுள்ள அமைச்சரவை இது; இங்கிருந்து 85 சதவிகித மனநிறைவோடு விடை பெறுகிறோம். இந்திய தேசமே தற்போது எங்களது அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது. ஐ.நா. அவையில் இந்தியாவின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் இடர்பாடுகளின்போது அண்டை நாடுகளுக்கு அனைத்து உதவிகளும் செய்திருக்கிறோம்.

ஸ்திரமான ஆட்சி...

வெளிநாட்டு தலைவர்களும் தற்போது இந்திய தலைவர்களை மதிக்க தொடங்கியுள்ளனர். எனது ஆட்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது. ஆதார் அட்டையை அமல்படுத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்தோம். பா.ஜ.க. அரசாங்கம் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் 100 சதவிகிதத்திற்கும் மேல் உழைத்துள்ளது. “30 ஆண்டுகளுக்குப் பின் எனது தலைமையில் தான் ஸ்திரமான ஆட்சி அமைந்தது" என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து