முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிஷப் இந்திய அணிக்கான அற்புதமான கண்டுபிடிப்பு - இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்ககரா புகழாரம்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இந்திய அணிக்கான அற்புதமான கண்டுபிடிப்பு என்று இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககரா தெரிவித்துள்ளார்.

தொடர் நாயகன்...

இந்திய அணியின் தலைசிறந்த வீரரான எம்எஸ் டோனி கடந்த 2004-ல் இருந்து சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். 37 வயதாகும் டோனி உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு எம்எஸ் டோனிக்கு மிகவும் சிறப்பானதாக இல்லை. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த வருடம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்து போட்டியிலும் அரைசதம் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

அற்புதமான கண்டுபிடிப்பு...

டோனியின் ஆட்டத்திறன் குறைந்து வரும் நிலையில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் அவரது இடத்தை பிடிக்க தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் டோனி இருக்க வேண்டும், ரிஷப் பந்த் இந்தியாவிற்கான அற்புதமான கண்டுபிடிப்பு என இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து குமார் சங்ககரா கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் இந்தியாவிற்கான அற்புதமான கண்டுபிடிப்பு. இளம் வீரராக இருந்தாலும், அல்லது வயது மூத்த வீரராக இருந்தாலும் அவர்களது இடத்திற்காக போட்டியிடுவது சிறந்தது.

டோனிக்கு கட்டாயம்...

அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதுதான் முக்கியது. அதை வாய்ப்பு அல்லது மிரட்டல் என்றும் எடுத்துக் கொள்ளலாம். உலகக்கோப்பை என்று வரும்போது அனுபவ வீரர்கள் அதிக அளவில் இருப்பார்கள். உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் டோனிக்கு கட்டாயம் இடமிருக்கும். இக்கட்டான நிலையில் விராட் கோலி டோனியுடன் அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட முடியும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து