முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒருநாள் போட்டி: வங்காள தேசத்தை எளிதில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

நேப்பியர் : நேப்பியரில் நடைபெற்ற வங்காளதேச அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் ஒருநாள் போட்டி...

வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 48.5 ஓவர்களில் 232 ரன்கள் அடித்து ‘ஆல்அவுட்’ ஆனது. முகமது மிதுன் அதிகபட்சமாக 62 ரன்னும், முகமது சாய்புதீன் 41 ரன்னும் எடுத்தனர். போல்ட், சான்ட்னெர் தலா 3 விக்கெட்டும் பெர்குசன், ஹென்ரி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

மார்ட்டின் கப்தில்...

பின்னர் 233 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், நிக்கோல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதம் அடித்த நிக்கோல்ஸ் அணியின் ஸ்கோர் 103-ஆக இருக்கும்போது 53 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 11 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு மார்ட்டின் கப்தில் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். மார்ட்டின் கப்தில் 116 பந்தில் 117 ரன்களும், ராஸ் டெய்லர் 49 பந்தில் 45 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து 44.3 ஓவரில் 2 விக்கெட் இழபபிற்கு 233 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சதமடித்த மார்ட்டின் கப்தில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஆட்டம் கிறிஸ்ட்சர்ச்சில் வருகிற 16-ந்தேதி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து