முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தல் பிரசாரம்: குஜராத்தில் தொடங்கினார் ராகுல் காந்தி

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

காந்திநகர் : பிரதமர் நரேந்திர மோடி பிறந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார்.

முதல் முறையாக...

வல்சாத் மாவட்டம், லால்டுங்ரி பகுதியில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் நேற்று பிற்பகல் அவர் உரையாற்றினார். 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபைத் தேர்தலின் போது பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி அங்கு சென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவியேற்று முதல் முறையாக குஜராத் சென்றார். அங்கு அவர் தனது முதல்கட்ட பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தை....

பிரதமர் மோடி பிறந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தவும், தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றவும் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். மேலும் அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடனும் அவர் ஆலோசனை நடத்துகிறார். ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி 1980-ம் ஆண்டும் தந்தை ராஜீவ் காந்தி 1984-ம் ஆண்டும், தாய் சோனியா காந்தி 2004-ம் ஆண்டும் அவர்களது தேர்தல் பிரச்சாரத்தை இங்குதான் தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து