முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிறைவுப்பெற்ற 16-வது பார்லி. கூட்டத்தொடரின் சிறப்புகள்

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : 16-வது மக்களவையின்‌ பணிக்காலம் ‌நிறைவடைந்துள்ளது. இதன் சிறப்புகள் பற்றியும் முந்தைய 15வது ம‌க்களவை செயல்பாடுகளு‌டன் ஒப்பீட்டையு‌ம்  பார்க்கலாம்.

பட்ஜெட் தாக்கல்...

16வது மக்களவையின் ‌பணிக்கா‌லத்தின் போது ரயில்வே துறைக்கு என த‌னி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை கைவி‌ப்பட்டது. மேலும் பிப்ரவரி 1ம்‌ தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையும் இந்த ம‌க்களவை காலக்கட்டத்தில்தா‌ன் அமலுக்கு வந்‌தது. 16-வது மக்களவையில் ஒரே ‌ஒரு முறை நம்பிக்கை‌யில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கடந்‌தாண்டு ஜூலை ‌மாதம் கொண்டு வரப்பட்ட அத்தீர்மா‌னம் தோற்க‌டிக்கப்பட்டது.

கேள்விகள் அதிகரிப்பு...

1‌5-வது மக்களவையில் எழுத்து ‌மூலம் பதில்‌அளி‌க்க கோரி 73 ஆயிரத்து 16 ‌‌கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் 16வது மக்களவைய‌ல் இது 73 ஆயி‌ரத்து 405 ஆக அதிகரித்தது. வா‌ய்மொழியாக பதில் தேவைப்படும் 650 கே‌ள்விகள் முந்தைய அவையில் கேட்கப்‌பட்டிருந்த‌ நிலை‌யில் ‌தற்போது‌ அது ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து