முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை -ஆரப்பாளையத்தில் மது மற்றும் போதை மாற்று சிகிச்சை பிரிவு : ஆணையாளர் அனீஷ் சேகர் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2019      மதுரை
Image Unavailable

மதுரை,-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள கலைவாணர் மகப்பேறு மருத்துவமனையில் மதுரை மாநகராட்சி மற்றும் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் மது மற்றும் போதை மாற்று சிகிச்சை பிரிவினை ஆணையாளர் மரு.அனீஷ்சேகர்,  திறந்து வைத்தார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்கும் வகையில் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் மது மற்றும் போதை மாற்று சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மனநல ஆலோசனை வழங்குதல், சிகிச்சை அளித்தல், மருந்து மாத்திரைகள் வழங்குதல் ஆகியவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். மேலும் மது மற்றும் போதை பழக்கத்திற்கு ஆளானவர்கள் சிகிச்சை பெறுவதற்கு 10 படுக்கை வசதிகளுடன் உட்கட்டமைப்பு வசதிகள் மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் 1 மனநல மருத்துவரும், 2 மனநல ஆலோசகர்களும், 2 செவிலியர்களும் செல்லமுத்து அறக்கட்டளை சார்பின் நியமிக்கப்பட்டு தினந்தோறும் சிகிச்சை வழங்குவார்கள். இந்த மது மற்றும் போதை மாற்று சிகிச்சை பிரிவினை கண்காணிப்பதற்கும் மற்றும் சிறப்பாக செயல்படுத்துவதற்கும் ஆணையாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர், மாநகராட்சி நகர்நல அலுவலர், உதவி நகர்நல அலுவலர், மனநல மருத்துவர் மனநல ஆலோசகர் மற்றும் மாநகராட்சி மருத்துவ அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து இப்பிரிவில் செயல்பாடுகளை மாதந்தோறும் கண்காணித்து வருவார்கள்.
இந்நிகழ்ச்சியில் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் மரு.ராமசுப்பிரமணியன், நகர்நல அலுவலர்  .சதிஷ்ராகவன், நகரப்பொறியாளர்  அரசு, உதவி ஆணையாளர் (பொ)  .முருகேசபாண்டியன், உதவி நகர்நல அலுவலர் மரு.சரோஜா, சுகாதார அலுவலர் .விஜயகுமார், மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்திரவேல், மனநல ஆலோசகர்  .செல்லமுத்து உட்பட மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து