முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நின்றுகொண்டே டூவீலர் ஓட்டி நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்! சாதனை பெண்மணிக்கு கள்ளிக்குடியில் சிறப்பான வரவேற்பு!!

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம். தமிழகம் முழுவதிலும் பத்தாயிரம் கிலோமீட்டர் தூரம் நின்று கொண்டே டூவீலர் ஓட்டியபடி நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள சாதனை பெண்மணி சைபீமேத்யூவிற்கு திருமங்கலம் அருகேயுள்ள கள்ளிக்குடியில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள மன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமதி.சைபீமேத்யூ.இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயற்கையோடு பெண்மையை இணைந்தே காப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் 3ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நின்றபடி டூவீலரை ஓட்டிச் சென்று சாதனை படைத்தார்.தற்போது நெகிழி பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் தமிழகம் முழுவதிலும் 10ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு நின்றபடி டூவீலரை ஓட்டிச் சென்று சாதனை படைக்க திட்டமிட்டு பயணம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் நேற்று காலை திருமங்கலம் அருகேயுள்ள கள்ளிக்குடி பகுதிக்கு வந்த சாதனை பெண்மணி சைபீமேத்யூவிற்கு சித்தர் கூடம் கல்வி நிறுவனங்கள்,விருதுநகர் பசுமை இந்தியா அமைப்பினர் மற்றும் திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழுவின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சித்தர்கூட கல்வி நிறுவனங்களான நம்குழந்தைகள் இல்லம்,சித்தர் கருவூறார் தொழிற்பயிற்;சி பள்ளி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சயில் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவ,மாணவியரிடையே நெகிழி பொருட்களின் தீமைகள் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.அப்போது மாணவர்கள் பயன்படுத்தும் சாக்லேட் பாக்கெட் கவர்,தின்பண்டங்கள் பாக்கிங் செய்யப்பட்டு வரும் பாலித்தீன் பைகள் போன்றவற்றை தரம்பிரித்து அகற்றிடுவது குறித்து சைபீமேத்யூ விளக்கமளித்தார்.பின்னர் விருதுநகர் மாவட்டத்தில் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை எற்படுத்திட நின்றபடி டூவீலரை சைபீமேத்யூ ஓட்டிச் சென்றார்.இந்த நிகழ்ச்சியில் சித்தர் கூட கல்வி நிறுவன நிர்வாகிகள்,திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழுவினர்,விருதுநகர் பசுமை இந்தியா அமைப்பினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாதனை பெண்மணி சைபீமேத்யூவை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து