முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் லண்டன் திரும்ப விருப்பம்

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

லண்டன், சிரியாவில் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷமீமா பேகம், கதிஜா சுல்தானா, அமைரா அபாஸ் ஆகிய மாணவிகள் வீட்டைவிட்டு வெளியேறினர். சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைய விரும்பிய அவர்கள், முதலில் துருக்கி சென்று அங்கிருந்து சிரியா சென்றுள்ளனர். அந்நாட்டில் ஆன்லைன் மூலம் பயங்கரவாத அமைப்புகள் ஏற்படுத்திய வாய்ப்புகளை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

சிரியாவின் ரக்காவிற்கு வந்த ஷமீமா, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நெதர்லாந்து நபரை மணந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்து, ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறந்தன. அதன் பின்னர் சிரியாவில் அமெரிக்க கூட்டுப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சிலர் சரண் அடைந்தனர். அப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதில் ஷமீமா பேகமும் ஒருவர். தற்போது இவர் 9 மாத கர்ப்பமாக இருக்கிறார்.

இது குறித்து ஷமீமா பேகம் கூறுகையில், 'ஏற்கனவே நான் இரண்டு குழந்தைகளை இழந்த நிலையில், தற்போது வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனுக்காக லண்டன் திரும்ப விரும்புகிறேன். இன்னும் சில தினங்களில் குழந்தை பிறக்கும் தருவாயில் உள்ளது. மீண்டும் நாடு திரும்ப எது வேண்டுமானாலும் செய்யவுள்ளேன். எனது குழந்தையுடன் சேர்ந்து அமைதியான வாழ்வை தொடர ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து