முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர், ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘இப்போது பிரிவினைவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் அந்த பேச்சுவார்த்தை போர்க்களத்தில் இருக்க வேண்டும். பொறுத்தது போதும்’ என்று காம்பிர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் கூறுகையில், “நமது வீரர்கள் மீதான கொடூர தாக்குதலைக் கேட்டு கவலையும் வேதனையும் அடைந்தேன். நமது வீரர்கள் பலர் மரணம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார். இதேபோல் ஷிகர் தவான், மயாங்க் அகர்வால், முகமது கைப், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களும் கண்டனம் தெரிவித்து டுவிட் செய்துள்ளனர்.

_________

இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா ‘ஏ’ வெற்றி

இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2-வது கிரிக்கெட் போட்டி மைசூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ‘ஏ’ அணி ஈஸ்வரன் (117), கேஎல் ராகுல் (81) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 392 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் 144 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. சைனி, நதீம் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

இந்தியா ‘ஏ’ பாலோ-ஆன் கொடுத்ததால் இங்கிலாந்து லயன்ஸ் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 2-வது இன்னிங்சிலும் இந்தியா ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 180 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ‘ஏ’ இன்னிங்ஸ் மற்றும் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்கண்டே 5 விக்கெட் வீழ்த்தினார்.

____________

தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் முன்னேற்றம்

தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 235 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்து இருந்தது. 2-ம் நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 191 ரன்னில் சுருண்டது. 44 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து இருந்தது.
தென்ஆப்பிரிக்க அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 48 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் அவர் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றி 9-வது இடத்தில் இருந்த கபில்தேவ் (434) சாதனையை முறியடித்தார். 92 டெஸ்டில் 437 விக்கெட் கைப்பற்றிய அவர் 7-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இங்கிலாந்து வீரர் பிராட்டுடன் இணைந்து அந்த இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீரரான ஸ்டூவர்ட் பிராட் 126 டெஸ்டில் 437 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

___________

தேசிய நடைப்பந்தயம் சென்னையில் நடக்கிறது

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜிம்கானா கிளப் அருகில் இருந்து அதிகாலையில் இந்த போட்டி தொடங்குகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் நாளையும் ஆண்களுக்கான 50 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான 10 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் 17-ந்தேதியும் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் முன்னணி வீரர்களான இர்பான், மனிஷ் சிங் ரவாத், வீராங்கனைகள் சவுமியா பேபி, ரவினா சந்தர், சாந்திகுமாரி உள்பட 200 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் தகுதி இலக்கை எட்டும் வீரர்- வீராங்கனைகள் கத்தாரில் செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 6-ந்தேதி வரை நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு பெறுவார்கள்.
இந்த போட்டியில் பங்கேற்க ஆசிய நாடுகளை சேர்ந்த வீரர்- வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சீன தைபே, மலேசியா வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கவனம் செலுத்துவதால் மற்ற நாட்டு வீரர்கள் வரமுடியவில்லை. இந்தப் போட்டி இன்றும், நாளையும் நடக்கிறது.
__________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து