முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் கூறும் போது,

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் செல்வதாகக் கூறப்பட்டது. பிறகு, சல்மான் சனிக்கிழமை பாகிஸ்தான் வருவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது பயணம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. சவுதி இளவரசர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சவுதி இளவரசர் பயணம் தாமதமானதற்கான காரணம் குறித்து எதுவும் கூறப்படவில்லை.

சவுதி இளவரசரின் இந்த பாகிஸ்தான் பயணத்தில் 10 -15 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக உடன்படிக்கைகள் ஏற்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சவுதி இளவரசரின் வருகையைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இளவரசருக்குத் தேவையான பொருட்கள் 5 லாரிகளில் இரண்டு நாட்களுக்கு முன்னரே பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து