முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

பீஜிங் : பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு அளிக்க அண்டை நாடான சீனா மறுத்து விட்டது.

ஐ.நா. வெளியிட்டு உள்ள தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் அந்த அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் பீஜிங்கில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பற்றிய செய்திகளை சீனா கவனத்தில் வைத்து உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஜெய்ஷ் - இ - முகமது இடம்பெற்று உள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை பொறுப்புள்ள வகையில் சீனா தொடர்ந்து கையாளும்.

பயங்கரவாத தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியாது; இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் சில விதிகளை பின்பற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து