முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி :டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆலோசனை

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

காஷ்மீரில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 மத்திய படை வீரர்கள் பலியானது ஒட்டுமொத்த இந்தியர்களை ஆவேசம் அடையச் செய்துள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் மத்திய மந்திரிசபையை அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்தும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றியும் ஆலோசனை நடத்தினார்.தேசிய புலனாய்வு அமைப்பு, உளவு அமைப்பான ‘ரா’, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். இதில் காஷ்மீரில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்யப்பட்டது.

உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் காஷ்மீரில் இருந்து டெல்லி திரும்பியதும் பிரதமர் மோடி வீட்டில் மீண்டும் மத்திய மந்திரி சபையின் பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நடந்தது.

இதில் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு காஷ்மீரில் உள்ள நிலைமை தொடர்பாக விளக்கி கூறினார். அறிக்கையும் தாக்கல் செய்தார். இந்த கூட்டத்திலும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.இதற்கிடையே புல்வாமா தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு நாடு முழுவதும் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து