முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராபர்ட் வதேரா நிறுவனத்தின் ரூ.4.62 கோடி சொத்து முடக்கம் -அமலாக்கத்துறை நடவடிக்கை

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்தின் 4.62 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பொருளாதார அமலாக்கத்துறை முடக்கியது. 

ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானர் நகரில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டில் மிகவும் குறைந்த விலையில் நிலங்களை வாங்கியது. பின்னர், அதிக விலைக்கு அந்த நிலம் ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது.

இதில் நடைபெற்றுள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள பொருளாதார அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா தனது தாய் மவ்ரீனுடன் சமீபத்தில் தொடர்ந்து விசாரணைக்குஆஜரானார். அவர்களிடம் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் புதிய திருப்பமாக ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவத்துக்கு சொந்தமான 4.62 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து