முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் செய்யும் நாசவேலைகளை பஞ்சாபில் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது’’ - முதல்வர் அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

சண்டிகர் : காஷ்மீரில் செய்யும் நாசவேலைகளை பஞ்சாபில் செய்ய பாகிஸ்தான் முனைந்தால் அந்த நாடே இருக்காது என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு  சம்பவத்தன்று துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். 

இதில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் பஞ்சாப் சட்டப்பேரவையில் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் அம்ரீந்தர் சிங் பேசியதாவது:

‘‘புல்வாமா தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் கோழைகள். துணிவின்றி பின்புறம் இருந்து தாக்கும் இவர்களை மக்கள் மன்னிக்க மாட்டர்கள். அவர்களை தூண்டி விட்டு வளர்த்து விடும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். பாகிஸ்தான் தொடர்ந்து பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது.

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிக்கிறார். ஆனால், அந்நாட்டு ராணுவ தளபதி ஜாவேத் பாஜ்வா போர் நடத்த ஏற்பாடு செய்கிறார். அந்தநாட்டு உளவுப்பிரிவு தீவிரவாதிகளை தூண்டி விட்டு இந்தியாவில் தொடர்ந்து நாசவேலைகளை செய்து வருகிறது. காஷ்மீரில் செய்யும் நாசவேலைகளை பஞ்சாபில் செய்ய பாகிஸ்தான் முனைந்தால் அந்த நாடே இருக்காது’’ என பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து