இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      சினிமா
rajender son islam 2019 02 16

சென்னை : டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன் நேற்று பெற்றோர் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.   

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தருக்கு சிம்பு, குறளரசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இளைய மகள் குறளரசன் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதன்பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை. சில ஆல்பங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்த நிலையில், குறளரசன் அவர்களது பெற்றோரான டி.ராஜேந்தர் - உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். 

குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து