முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

பாங்காக் : தாய்லாந்து பிரதமர் தேர்தலில் 3 பிரதான வேட்பாளர்களில் ஒருவராக, முதல் திருநங்கை வேட்பாளர் களமிறங்கி உள்ளார்.

தாய்லாந்தில் மார்ச் மாதம் 24 -ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அங்குள்ள பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இதில் நாட்டின் பிரபல கட்சிகளில் ஒன்றான மகாசோன் கட்சி, பவுலின் காம்ப்ரிங் என்ற திருநங்கையை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. கடந்த 3 ஆண்டுக்கு முன்பு வரை பினித் காம்ப்ரிங் என்ற பெயரில் ஆணாக இருந்து 2 குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருந்த இவர், பத்திரிகையாளராகவும், தொழிலதிபராகவும் இருந்தார். கால்பந்து ரசிகர் கூட்டமைப்பை நிறுவி தாய்லாந்து விளையாட்டு துறையிலும் புகழ் பெற்று விளங்கினார். பின்னர் பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறி தனது பெயரையும் பவுலின் என மாற்றிக் கொண்டார்.

தாய்லாந்து பிரதமர் தேர்தலில் 3 பிரதான வேட்பாளர்களில் ஒருவராகவும், முதல் திருநங்கை வேட்பாளராகவும் களமிறங்கி இருக்கும் பவுலின் காம்ப்ரிங் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார். தான் வெற்றி பெறவில்லை என்றாலும், அடுத்த தலைமுறையிலாவது திருநங்கை ஒருவர் நாட்டின் தலைவராக வருவார் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து