முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத தற்கொலை தாக்குதல்: பாகிஸ்தானுக்கு ஈரான் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

டெஹ்ரான் : ஈரானில், கடந்த புதன் அன்று 27 ஈரானிய ராணுவத் துருப்புகள் மீது தற்கொலைப் படை வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதற்குப் பின்னால் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் ஆதரவு இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்பஹான் நகரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்குகள் நிகழ்ச்சியில் பங்கேற்று ஈரான் ராணுவத் தளபதி ஜெனரல் முகம்மது அலி ஜாஃபரி தெரிவித்ததாவது:

இஸ்லாத்திற்கும் ஈரானிய புரட்சிகர அரசுக்கும் எதிரானவர்களுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் தந்துள்ளது. அவர்கள் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்பது பாகிஸ்தான் அரசுக்குத் தெரியும். அதேநேரத்தில் அவர்களை பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஆதரித்து வருகின்றன. அத்தீவிரவாதிகள் அனைவரும் ஜெய்ஷ் அல்-அதுல் (நீதியின் ராணுவம்) இயக்கத்தைச் சேர்ந்த ஜிகாதிகள் ஆவர்.

ஜெய்ஷ் அல் அதுல் தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு தண்டிக்கவில்லையெனில், அத்தகைய ஈரானிய எதிர்ப்பு சக்திகளான எதிர்-புரட்சிகரப் படைகளுக்கு பதிலடி கொடுப்போம். தீவிரவாத இயக்கத்திற்கு பாகிஸ்தான் துணை நிற்பதோடு, தீவிரவாதத்தைத் தூண்டி வருமேயானால் அதற்கான எதிர்விளைவுகளையும் விரைவில் அவர்கள் சந்தித்தேயாக வேண்டும் என்று எச்சரிக்கிறோம்.இவ்வாறு ராணுவத் தளபதி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து