முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்வாமா தாக்குதல் எதிரொலி:காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திடீரென வாபஸ் பெற்று அம்மாநில நிர்வாகம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.

புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த நிகழ்வையடுத்து சிறீநகருக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,

ஜம்மு காஷ்மீரில் உள்ள சிலர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யிடமும், தீவிரவாத அமைப்புகளிடமும் தொடர்பு வைத்துள்ளார்கள். அவர்களுக்கான பாதுகாப்பை திரும்பப் பெறுவோம் எனத் தெரிவித்திருந்தார். அதன்படி இப்போது திரும்பப் பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரிவினைவாத தலைவர்கள், மிர்வாஸ் உமர் பரூக், அப்துல் கானி பாட், பிலால் லோன், ஹசிம் குரோஷி, ஷபிர் ஷா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு இன்று மாலைக்குள் விலகிக்கொள்ளப்படும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், அதேசமயம், பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத தலைவர் சயித் அலி ஷா கிலாணிக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறுவது குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து