முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி உடனடியாக அமலுக்கு வருகிறது - மத்திய அரசு அதிரடி

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : புல்வாமா தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்த வர்த்தக்துக்கு உகந்த நட்புறவு நாடு எனும் சிறப்பு அந்தஸ்தை ஏற்கனவே மத்திய அரசு ரத்து செய்திருந்த நிலையில், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.மத்திய அரசின் இந்த முடிவால், பாகிஸ்தானுக்கு ரூ.3 ஆயிரத்து 482.3 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து அதிக அளவு பழங்கள், சிமென்ட்இறக்குமதி செய்யப்படுகின்றன. பழங்களுக்கு 30 முதல் 50 சதவீதம் வரை தற்போது இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதேபோல், சிமென்ட்டுக்கு 7.5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.இந்நிலையில், இறக்குமதி வரியைக் கடுமையாக உயர்த்தியிருப்பது, பாகிஸ்தானிடம் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஏறக்குறையத் தடை விதித்தற்கு ஒப்பாகும் என மத்தியஅரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

புல்வாமாவில் இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கி இருந்த  வர்த்தக நட்பு நாடு என்ற சிறப்பு அந்தஸ்து மத்திய அரசு ரத்து செய்தது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் அடிப்படை சுங்க வரி 200 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து