முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண் ஆகிவிடக்கூடாது. பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் - வெங்கையா நாயுடு பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், பாடம் கற்பிக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.  

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கங்கையில் புனித நீராடினார். பின்னர் அங்குள்ள புகழ் பெற்ற அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமானது. பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இதுபோன்ற நடவடிக்கைகளை வேருடன் அகற்றுவதற்கு இதுவே சரியான தருணம். பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி தரவேண்டும்.

உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண் ஆகிவிடக்கூடாது. இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு அதற்குரிய பலனை திருப்பித்தர வேண்டும். பயங்கரவாதிகள் நம்மை பயமுறுத்தவும், நமது துணிச்சலை குறைக்கவும் விரும்புகிறார்கள். எனவே நாம் துவண்டுவிடவும் கூடாது, பலமிழந்துவிடவும் கூடாது.

அவர்கள் கொடுத்ததை அவர்களுக்கே நாம் திருப்பித்தர வேண்டும். இதுபோன்ற கோழைத்தனமான செயலை அவர்கள் மீண்டும் செய்வதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்கும் வகையில் இந்த துரோகிகளுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும். இந்தியா மிகப்பெரிய நாடு. இந்தியா முதலில் எந்த நாட்டையும் தாக்கியது இல்லை என்பதற்கு வரலாறே சான்றாக உள்ளது.

உலக நாடுகளின் மக்கள் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். ஆனால் அது எந்த நோக்கத்தையும் பூர்த்தி செய்யாது. இந்த பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து