முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடக் கூடாது - பி.சி.சி.ஐ.க்கு சி.சி.ஐ.செயலாளர் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : புல்வாமாவில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ.க்கு கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மும்பையில் பாரம்பரிய கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா (சிசிஐ) தன்னுடைய ரெஸ்டாரண்டில் இருந்த இம்ரான் கான் புகைப்படத்தைத் திரையிட்டு மறைத்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவின் செயலாளர் சுரேஷ் பாப்னா நிருபர்களிடம் கூறுகையில்,

புல்வாமாவில் நமது ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித் தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடும் ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ.அமைப்பை வலியுறுத்தியுள்ளோம். சி.சி.ஐ. அமைப்பு விளையாட்டோடு தொடர்புடையதாக இருந்தாலும், தேசத்து முதலிடம், அதன்பின் விளையாட்டு.

புல்வாமாவில் இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதில் அளிக்க வேண்டும். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று பிரதமர் இம்ரான் கான் நம்பினால், ஏன் வெளிப்படையாக வந்து பேச மறுக்கிறார். மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். அவர் வெளிப்படையாகப் பேச மறுத்தால், ஏதோ தவறு நடந்திருக்கிறது என அர்த்தம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து