முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற 40 தொகுதிகளிலும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெறும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      மதுரை
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அதிமுக சார்பில் கழக இணை இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் மேலான ஆணைக்கிணங்க புரட்சித்தலைவி அம்மாவின் நீடித்த புகழுக்கு காரணம் அகிலம் வியந்த அஞ்சாமையா அதிசயம் படைத்த ஆளுமையா என்ற தலைப்பில் மாபெரும் பட்டிமன்றம் நிலக்கோட்டையில் நடைபெற்றது ஒன்றிய கழக செயலாளர் யாகப்பன் தலைமை வகித்தார் அம்மையநாயக்கனூர் பேரூர் கழக செயலாளர் தண்டபாணி வரவேற்றார் வத்தலகுண்டு ஒன்றிய கழக செயலாளர் எம் வி எம் பாண்டியன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் மாநில  அம்மா பேரவை  இணை செயலாளர் ஆர் வி என் கண்ணன்  மாவட்டக் கழகப் பொருளாளரும்  திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான  எம் உதயகுமார்,  மாவட்ட கழக செயலாளரும்  மாநகராட்சி முதல்வருமான வி மருதராஜ்  கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா விஸ்வநாதன் ஆகியோர் பேசினர் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும் வனத் துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன்    சிறப்புரையாற்றினார் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முனைவர் வைகைச் செல்வன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது அகிலம் வியந்த அஞ்சாமை என்ற தலைப்பில் நெத்தியடி நாயகனாக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம்,  ஆகியோர் பேசினர் அதிசயம் படைத்த ஆளுமையா என்ற தலைப்பில் கோபி காளிதாஸ் வடுகபட்டி சுந்தரபாண்டியன் ஆகியோர் பேசினர்
நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று கிராமசபை கூட்டம் நடத்துகிறார் கூட்டம் நடத்துவது பெரிதல்ல மக்கள் அன்பை பெறுவது தான் முக்கியம். வீரியம் பெரிதா? காரியம் பெரிதா? என்றால் காரியம் தான் பெரியது  கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி தமிழ்நாடு துணை முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பொங்கல் பரிசாக ரூ 1000 வழங்கினார் இது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது இதனை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக மருமகன் சபரீசன் பேச்சை கேட்டுக்கொண்டு கிராமசபை கூட்டம் நடத்துகிறார் அக்கூட்டத்தில் மக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் இது முதல் பொய் இரண்டாவதாக ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு கழக அரசு தான் காரணம் என பொய் சொல்கிறார் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கூடாது என கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியது திமுகவினர் தான் இரண்டரை வருடங்களாக தேர்தலை நிறுத்திவிட்டு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதி நிறைவேற்றப்பட்டுள்ளன தமிழகத்தில் 12624 கிராம ஊராட்சிகள் உள்ளன     80,000 குக்கிராமங்கள் உள்ளன 234 தொகுதிகளிலும் அனைத்து பணிகளும் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது
நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ தங்கதுரை எதற்காக இந்த கட்சியை விட்டு சென்றார் இந்த கட்சியின் மீது என்ன குறை கண்டார்? எதற்காக டிடிவி தினகரன் பின்னால் சென்றார்? அவர் பின்னால் போனதால் எம்எல்ஏ பதவி போனதுதான் மிச்சம். இன்று தெருவில் இருக்கின்றார் வரக்கூடிய இடைத்தேர்தலில் எனக்குத்தான் வெற்றி என இத்தொகை மக்கள் தீர்மானிப்பார்கள். நிலக்கோட்டை தொகுதி என்றும் அம்மாவின் பக்கம் தான் உள்ளது என நிரூபிப்பார்கள் துரோகம் செய்தவர்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை மக்களுக்கு நன்மை செய்யாத துரோகி டிடிவி தினகரன். லோக் ஆயுக்தா சட்டம் அதிகாரத்தில் உள்ளவர்களை விசாரணை செய்வதற்காக உருவாக்கப்பட்ட நீதிமன்றம். இதற்கான நீதிபதி தேர்வு செய்ய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் என்ற முறையில் அழைத்தபோது அவர் ஏன் வரவில்லை. கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என ஸ்டாலின் கூறினார். இதனையடுத்து கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தியை பற்றி பேசவே இல்லை. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகின்றார். இனி கட்சியில் துரோகிகளுக்கு இடம் கிடையாது கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் தலைமையின் கீழ் உள்ளவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கும். தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என துணை ஜனாதிபதி கையால் விருது வழங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கல்வித்துறைக்காக ஒரு 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் உலக முதலீட்டாளர் மாநாடு அம்மா கூடியபோது 2 லட்சம் கோடி முதலீடு கிடைத்தது. தற்போது கழக ஆட்சியில் 3 லட்சத்து 44 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. தமிழகம் அமைதி மாநிலமாக திகழ்கிறது. திமுக ஆட்சியில் இல்லாத புதுமை கழக ஆட்சி செய்து கொண்டு வருகிறது. ஸ்டாலின் ஆசிரியர் போராட்டத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தார். ஆனால் கழக அரசு ராஜதந்திர நடவடிக்கை எடுத்ததாக போராட்டம் கைவிடப்பட்டது. நிதி நிலைமையை அவர்களுக்கு எடுத்துக் கூறினால் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் ஸ்டாலினுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றுவதற்காக கிராமம் கிராமமாக ஸ்டாலின் சென்று வருகின்றார். வருகிற தேர்தலில் திமுகவிற்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகமே வெற்றி பெறும்.
கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி  கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் சிறப்பான முறையில் ஆட்சி புரிகின்றனர் அவர்களுக்கு தமிழக மக்கள் தொடர்ந்து பேராதரவை அளிக்க வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பேரூர் கழக செயலாளர் சேகர் வத்தலகுண்டு பேரூர் கழக செயலாளர் பீர்முகமது. முன்னாள் சேர்மன் திவான் பாட்ஷா, பேரவை செயலாளர் vijayarajan முன்னாள் அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதி முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான் நன்றி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து