முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்:

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்  கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமினை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் அம்மாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனையின் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் சிறப்புடன் நடைபெற்றது. இந்த கண் சிகிச்சை மருத்துவ முகாமிற்கு மதுரைமாவட்ட ஆட்சியர் நடராஜன் முன்னிலை வகித்தார். திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த மாபெரும்  இலவச கண் சிகிச்சை முகாமினை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டு சிறப்புரையாற்றினார். இதில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் விஜயலட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்று 300-க்கும் மேற்பட்டோருக்கு கண்பரிசோதனையும், கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான அனைத்து நவீன சிகிச்சைகளையும் வழங்கினார்கள். அப்போது தேவையுள்ளோருக்கு இலவச கண்ணாடிகள் மற்றும் தேவையான நபர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச் செல்வம், திருமங்கலம் அவைத் தலைவர் ஜஹாங்கீர், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் சதீஸ் சண்முகம், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் வக்கீல்.அன்பழகன், கள்ளிக்குடி ஒன்றியச் செயலாளர் உலகாணி மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றிய அவைத் தலைவர் அன்னக்கொடி,துணைச் செயலாளர்கள் சுகுமார்,சுமதி சாமிநாதன்,பேரூர் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், நெடுமாறன்,கட்சி நிர்வாகிகள் சிவனாண்டி, சுரேஷ்,மாதவன், நேதாஜி, செல்வம், சிவகுமார், வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஸ்வரன், ராஜசேகர், ஆனந்த்,விவேக்,வேல்ராம கிருஷ்ணன், சரவணபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து