முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலின் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆதரவு

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மு.க.ஸ்டாலின் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

வெளிப்படையாக...

மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் ஒட்டுமொத்த உணர்வு அந்த ஆலை தேவையில்லை என்பதுதான். இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. ஆலை மூடப்படவேண்டும் என்ற வாதத்தை உச்சநீதிமன்றத்தில் ஆணித்தரமாக எடுத்து வைத்தோம். நமது வாதங்கள் வலுவாக இருப்பதால் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டது. எப்போது வேண்டுமாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி குறித்த அனைத்து

விபரங்களும் வெளிப்படையாக தெரியவரும்.

ஒன்றும் செய்ய முடியாது...

அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை யானைபலம் கொண்ட கூட்டணி. யானைக்கு தும்பிக்கை நம்பிக்கையாக இருக்கின்றதோ அதுபோல மக்களுக்கு நம்பிக்கையாக இருப்பது அ.தி.மு.க.தான். எம்ஜிஆரின் கொள்கை,ஜெயலலிதாவின் கொள்கையை முழுமையாக நிறைவேற்றும் இயக்கம் அ.தி.மு.க. எனவேநாங்கள் யானை பலத்துடன் இருக்கும் காரணத்தினால் பூனை பலம் எல்லாம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.

நடிகர் கமல் என்னை பற்றிபேசும் போது நான் அவருடைய படத்தை பார்ப்பேன் என்றும் அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

அதுபோல அரசியலில்

சொந்தம், பந்தம், நட்பு என்பது கிடையாது. கொள்கைக்கு கொள்கை. எங்களை சீண்டினால் நாங்கள் பதில் சொல்லாமல் இருக்க மாட்டோம். யாராக இருந்தாலும் எங்களை சீண்டினால் நிச்சயமாக பதிலடி தருவோம். ஸ்டாலின் குறித்து நடிகர் கமல் சரியாகதான் கூறியுள்ளார். அரசியலில் எதுவேண்டுமானும் நடக்கலாம். அரசியலில் நட்பும் இல்லை. எதிரியும் இல்லை.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து