முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

165-வது பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் உ.வே.சா. திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதய்யரின் சிறப்பைப் போற்றும் வகையில் அவரின் 165வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அச்சு வடிவில்...

உ.வே. சாமிநாதய்யர், அரிய பல தமிழ்ச் சுவடிகளைத் திரட்டியும், தொகுத்தும் தமிழுலகிற்குத் தந்து அருந்தமிழ்த் தொண்டாற்றியவர். இவர் மட்டும் இப்பணியைச் செய்யாமல் போயிருந்தால் எத்தனையோ அரிய தமிழ்ச் சுவடிகள் கரையானுக்கு இரையாகியிருக்கும், காலப்போக்கில் மறைந்து போயிருக்கும் செம்மொழித் தமிழின் கருவூலங்கள் ஓலைச் சுவடிப் புதையலிலிருந்து அச்சு வடிவில் பாதுகாப்புப் பெற உழைத்தவர். டாக்டர் உ.வே.சா. பத்துப்பாட்டு, எட்டுத் தொகை ஆகிய சங்க நூல்களுள் பலவற்றையும், தமிழ் விடுதூது போன்ற வேறு பல அரிய தமிழ் நூல்களையும் அச்சு வடிவில் பல தலைமுறை காண உதவியவர். இவ்வாறு தமிழ்ச் சுவடிகளைத் தேடிச் சேகரித்துப் பிழைகளைத் திருத்தி, உரைக் குறிப்பு அளித்து, அச்சிட்டு, நூல்களாகக் கொணர்ந்து தமிழுக்கு வளம் சேர்த்த இத்தமிழ்ச் சான்றோரின் பணி தமிழ் உலகில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

அமைச்சர்கள்...

இவ்வாறு தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதய்யரின் சிறப்பைப் போற்றும் வகையில் நேற்று அவரது 165வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் உ.வே.சா.வின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், க.பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் இரா. வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் கோ.விசயராகவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து