மண்டபம் பகுதியில் அட்வான்ஸ்டு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையம் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      ராமநாதபுரம்
19 rms news

 ராமேசுவரம் - மண்டபம் பகுதியில் பொதுமக்களின் வசதிக்கேற்ப தனியார் நிறுவனத்தின் சார்பில் அட்வான்ஸ்டு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையம் நேற்று திறக்கப்பட்டது.
 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் மீனவர்கள் குடும்பங்கள் உள்பட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் பல்வேறு நோய்களுக்கு ராமநாதபுரம்,மதுரை போன்ற பகுதிகளிக்கு சென்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும் சுழ்நிலைகள் இருந்து வருகிறது.இந்நிலையில் மண்டபம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று   கார்த்திகை சாமி ஸ்கேன்ஸ் (அட்வான்ஸ்டு அல்ட்ரா சவுண்ட் 4 டி டாப்ளர்) மையத்தை நேற்று புதியதாக திறக்கப்பட்டது. இந்த ஸ்கேன் மையம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் டாக்டர் இளையராஜா கல்வி குழும  ஆலோசகர் பி.விஜய லட்சுமி வரவேற்றார். ராமநாதபுரம் ராசி கலர் ஸ்கேன்ஸ் மருத்துவர் சின்னதுரை அப்துல்லா ஸ்கேன் சென்டரை திறந்து வைத்தார். ராமநாதபுரம் எஸ்.பி.ஸ்கேன்ஸ்  மருத்துவர் எஸ்.பி.ஆக்னெல்லா, ராமநாதபுரம் குமரன் ஸ்கேன்ஸ் மருத்துவர் டி.ராஜ்குமார், ரேடியோலஜிஸ்ட் மருத்துவர் எஸ்.வருசை முகமது ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சாதிக் அலி, ராமநாதபுரம் ஜவஹர் மருத்துவமனை மருத்துவர் கே.ஜவஹர் பாரூக் உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் இளையராஜா குழும தலைமை செயல் அதிகாரி  மணிகண்டராஜா நன்றி கூறினார். மண்டபம் ராஜேஸ்வரி கிளினிக் மற்றும் டாக்டர் இளையராஜா எஜுகேஷன் & ஹெல்த் சர்வீசஸ் டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் இளையராஜா, கார்த்திகை சாமி ஸ்கேன்ஸ் மருத்துவர் ஆர்.சஹானா ஆகியோர் நிகழ்சி ஏற்பாடுகளை செய்தனர்.இனி மேல் பொதுமக்கள்  ஸ்கேன் எடுப்பதற்கு ராமநாதபுரம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இந்த ஸ்கேன் சென்டர் மண்டபம் மக்களுக்கு வர பிரசாதமாக உள்ளதாக பொதுமக்கள் கூறினர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து