முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் வெறும் 24 ரன்களில் ஆல் அவுட்டான ஓமன் 3.2 ஓவரில் முடிவுக்கு வந்தது போட்டி

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

அமராத் : ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஓமன் அணி வெறும் 24 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த வினோதமான நிகழ்வு நடந்துள்ளது.

ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி, ஓமனுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் 50 ஓவர் போட்டி அல் அமராத்தில் நடந்தது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

24 ரன்களுக்கு...

அதன்படி களமிறங்கிய ஓமன் அணி, மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஸ்காட்லாந்து அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓமன் பேட்ஸ்மேன்கள் ஒருவர் பின் ஒருவராக சீட்டுக்கட்டு போல் சரிந்தனர். இறுதியில், 17.1 ஓவர்களில் வெறும் 24 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் ஓமன் அணி பறிகொடுத்தது. அதில், வொயிடு மூலம் 3 ரன்கள் கிடைத்தன. அந்த அணி எடுத்த ரன்கள் 21தான். 5 வீரர்கள் ஒரு ரன்கூட எடுக்காமல் அவுட்டாகினர். ஒருவர் மட்டும் அதிகபட்சமாக 15 ரன்கள் எடுத்தார். மற்ற 4 வீரர்கள் ஒன்ற இலக்கத்தில் வெளியேறினர்.

3.2 ஓவரில்...

25 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் 3.2 ஓவர்களில் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். முதல் தர போட்டியில் 4-வது குறைந்தபட்ச ரன்கள் இதுவாகும். முதல் மூன்று இடங்களில் கீழ்கண்ட அணிகள் உள்ளன.
1. 2007 - வெஸ்ட் இண்டீஸ் அணி U19 - 18 ரன்கள்
2. 2012 - சரேசன்ஸ் எஸ்.சி - 19 ரன்கள்
3. 1974 - மிடில்செக்ஸ் - 23 ரன்கள்
ஸ்காட்லாந்து அணி அடிக்கடி முன்னணி அணிகளுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. 2018-ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 371 ரன்கள் குவித்தது. 6 ரன்கள் வித்தியாசத்தில் அப்போதைய நம்பர் ஒன் அணியான இங்கிலாந்து தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து