முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கோலி ஆதிக்கம் செலுத்துவார் - ஆஸி. முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கணிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : இந்தியா- ஆஸ்திரேலியா தொடரில் விராட் கோலி ஆதிக்கம் செலுத்துவார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மத்தேயு ஹேடன் தெரிவித்துள்ளார்.

இரு வகை போட்டி...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் உலகக் கோப்பைக்கு முன் இந்தியா விளையாடும் கடைசி தொடர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. இதனால் இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணி அந்தத் தோல்விக்கு பழிவாங்கும் என்பதால் தொடரில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

சிறப்பாக உள்ளது...

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மத்தேயு ஹேடன் இந்தத் தொடர் குறித்து நாளிதழில் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அதில் ஹேடன், “இந்திய அணியில் விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா நன்றாக விளையாடிவருவதால் ஆஸ்திரேலியா அணிக்கு சவாலாக இருக்கும். அத்துடன் ஆஸ்திரேலிய அணியில் ரிச்சர்ட்சன் சிறப்பாக பந்துவீசி வந்தாலும் அவருக்கு இது முதல் இந்திய தொடர் என்பதால் பெரிய சவால் காத்திருக்கிறது. ஆனாலும் இந்திய ஆட்டக்காரர்களின் தற்போதயை ஆட்டம் சிறப்பாக உள்ளதால் விராட் கோலி இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்துவார்”எனக் கூறினார்.

சிறப்பான ஆட்டம்...

இதற்கிடையே இந்தத் தொடர் குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், “இந்தியா கிரிக்கெட் அணி தன்னுடைய சொந்த நாட்டு சூழலில் எப்போதும் சிறப்பாக விளையாட கூடிய அணி. இதனால் நாங்கள் இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்றால் எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும்” எனக் கூறினார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் 24 ஆம் தேதி முதல் டி20 போட்டியுடன் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து