முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 424 தனியார் நிறுவனங்களுக்கு ராணுவ தளவாடங்கள் தயாரிக்க அனுமதி: நிர்மலா

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் 424 தனியார் நிறுவனங்களுக்கு ராணுவ தளவாடங்கள் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்தார்.

பெங்களூரு நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹெலங்கா விமானப்படை தளத்தில் இந்திய விமானங்கள் தொடர்பான 12-ம் ஆண்டு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் 232 நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 63 விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இந்த கண்காட்சியின் முதல்நாளான நேற்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 228 டோர்னியர் ரக விமானங்கள் மற்றும் ஏ.எல்.ஹெச் துருவ் என 228 விமானங்கள் ஆப்கானிஸ்தான், மொரீசியஸ், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2014 முதல் 2018 வரையிலான கடந்த 4 ஆண்டுகளில் 424 தனியார் நிறுவனங்களுக்கு ராணுவ தளவாடங்கள் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், 6 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 237 கோடி ரூபாய் முதலீட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து