முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்தியாவின் வட மாநிலங்களில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளது. 

சாம்லி மாவட்டத்தில்...

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும், மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சாம்லி மாவட்டத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் சில விநாடிகள் நீடித்தது. சாம்லி மாவட்டத்தில் கந்தவா என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டு இருந்ததாக புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இது டெல்லியில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ளது.

சேதம் இல்லை...

இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் இல்லை. லேசான அதிர்வு மட்டும் காணப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் அதை தாங்கள் சில விநாடிகள் உணர்ந்ததாக டுவிட்டரில் ஒருவருக்கொருவர் தெரிவித்தனர்.

இதே போல் மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானிலும் நேற்று  காலை 7.05 மணி அளவில் லேசான நிலடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து