முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளும் வரும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளும் வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரி்வித்தார்..

மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கான புத்தாக்க பயிற்சமுகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த புத்தாக்க பயிற்சிமுகாமை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பக்குவப்படவில்லை...

அம்மாவின் மறைவுக்கு பின்னர் அவருடைய ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். அம்மாவின் ஆட்சி கடந்த பிப்ரவரி 14-ம் தேதியோடு இரண்டாண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அம்மாவின் ஆட்சி, அம்மாவின் திட்டங்களை மட்டுமில்லாமல் அதையும் தாண்டி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.  அ.தி.மு.க கூட்டணியை வெற்றிகரமாக அமைத்திருக்கிறது. தி.மு.க கூட்டணி பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் அ.தி.மு.க அமைத்த கூட்டணி பற்றி மு.க.ஸ்டாலின் கவலைப்படுகிறார். அவர் அரசியலில் பக்குவப்படவில்லை. அ.தி.மு.க கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டிய தேவை அவருக்கு இல்லை.

வெற்றி கூட்டணி...

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள், நிலைத்து நின்றதாக வரலாறு இல்லை. 98 -ம் ஆண்டு பா.ஜ.க.வுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்தார். அந்த கூட்டணி வெற்றி பெற்றது வாஜ்பாய் பிரதமரானார். அது மக்கள் ஏற்றுக்கொண்ட கூட்டணி. இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். 40 தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவோம். அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. மட்டுமல்ல, தி.மு.க கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் வரும். விரும்பி வந்தவர்களை கூட்டணியில் சேர்த்தோம். அம்மாவின் விருப்பத்தை போல மகத்தான கூட்டணியை அமைத்திருக்கிறோம். இந்த கூட்டணி வெற்றிக்கூட்டணியாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து